தயாரிப்பாளர் தன்னை 3 ஆவது சந்திப்பிலேயே துஷ்பிரயோகம் செய்ததாக பிரபல நடிகை பகீர் புகார்!

தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் நடித்துள்ள பாயல் கோஷ் பிரபல இந்தி பட டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். நடிகையின் புகார் குறித்து மும்பை பொலீசார், அனுராக் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அதில், அவர் தென்னிந்தியாவில் தேசிய விருது வாங்கிய டைரக்டர்கள் வரை பலருடன் பணியாற்றி உள்ளேன். ஆனால், இதுவரை எந்தவொரு டைரக்டரும் என்னை தொட்டுக் கூட பேசியது இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால், பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் உடன் இதுவரை ஒரு படம் கூட நான் பண்ணவே இல்லை. 3வது சந்திப்பிலேயே என்னை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார் என நடிகை பாயல் கோஷ் மீண்டும் தனது மீடூ புகார் கதையை புதிதாக ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே நடிகை பாயல் கோஷ் அனுராக் காஷ்யப் மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார். பாயல் கோஷின் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என மறுத்து இருந்தார். நடிகை டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்களும் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக பேசியிருந்தனர். இந்நிலையில், மீண்டும் அனுராக் காஷ்யப் மீது இப்படியொரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார் பாயல் கோஷ்.

சமீபத்தில், திடீரென நான் தற்கொலை செய்து கொண்டாலோ, எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாலோ அதற்கு இவர் தான் காரணம் என பெயர் எதுவும் குறிப்பிடாமல் ஒரு மரண எச்சரிக்கை கடிதத்தை எழுதி பரபரப்பை கிளப்பிய நடிகை பாயல் கோஷ் மீண்டும் தற்போது அனுராக் காஷ்யப்பை சீண்டியபடி போஸ்ட் போட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *