தங்கையை திருமணம் செய்த அண்ணன்: 6 ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்த உண்மையால் அதிர்ச்சி!

 

ஒரு தாய்க்குக்குப் பிறந்த தனது சொந்த தங்கையை திருமணம் செய்துக் கொண்ட ஒன்றாக வாழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன்

பல ஆண்டுகளுக்கு முன் பிறந்த சில நிமிடங்களில் ஒரு ஆண் குழந்தை தத்தெடுக்கப்பட்டது. இப்படி தத்தெடுத்ததை எங்கும் வெளியிடக் கூடாது என்ற விதி உள்ளதால், சிறுவனின் பெற்றோர் எந்த தகவலும் பகிரவில்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்கள் ஆறு ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.

6 ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை
இவ்வாறு வாழ்ந்து வந்துக் கொண்டிருக்கையில், அண்மையில் அந்த ஆண் தனது சிறுநீரகத்தை தனது மனைவிக்கு தானம் செய்ய முடியுமா? என்று சில சோதனைகளை செய்துள்ளார்.

அப்போது அந்த சோதனையில் கிடைத்த தகவல் அவர் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டது போல இருந்தது. ஆம், அவர்கள் ​இருவரும் ஒரே தாயின் குழந்தைகள் என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

ஆறு ஆண்டுகளாக தான் குடும்பம் நடந்தி வந்தது. எனது மனைவி அல்ல என் சகோதரி என்பதை அறிந்த அந்த ஆண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த தகவலை அவர் Redditல்மூலம் பகிர்ந்திருந்தார். அதில்,

“எங்கள் மகன் பிறந்த பிறகு, என் மனைவி நோய்வாய்ப்பட்டாள், இப்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள்.

அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயன்றபோது சரியான சிறுநீரகங்கள் கிடைக்கவில்லையாம். இதனால் தன்னுடைய சிறுநீரகத்தை கொடுக்க கணவர் முன்வரவே, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல பரிசோதனைகள் செய்யப்பட்ட போது கணவன் மனைவியாக வாழ்ந்த இருவரும் உடன்பிறப்பு என்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் இனி என்ன செய்வது என தெரியாமல் Redditல் ஆலோசனைக் கேட்டிருக்கிறார்.

தங்கையை திருமணம் செய்த அண்ணன்

இதில் வழக்கப்பட்ட ஆலோசனையானது, “உங்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? வாழ்க்கைக்கு அவ்வளவுதான் முக்கியம். இல்லையா? உங்கள் மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருங்கள்” பகிர்ந்துள்ளார்.

இந்த தகவல் தற்போது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *