பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதி!

நீச்சல் குளங்களில் குளிப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு விடயம்தான்.

எவ்வளவு நேரமானாலும் ஆறுதலாகவும் பிடித்த விதத்திலும் குளிக்கலாம். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

ஆனால், சில நாடுகளில் சில விடயங்களைச் செய்யலாம் என கொடுக்கப்படும் அனுமதி நம்மை வியப்பில் ஆழ்த்தவே செய்கின்றன.

ஜேர்மன் நாட்டில் பெண் ஒருவர் பொது நீச்சல் குளத்தில் மேலாடையின்றி சூரிய குளியல் செய்துள்ளார். பொதுவெளியில் இவ்வாறு செய்ததற்காக குறித்த பெண்ணை நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதனால் குறித்த பெண்மணி, ஆண், பெண் என்று பாகுபாடின்றி விருப்பப்பட்டால் பெண்களும் ஆண்களைப் போல் மேலாடையின்றி குளிக்க அனுமதியளிக்க வேண்டும் என செனட்டின் புகார் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் பெண்கள் பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பெர்லின் நகரில் பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளங்களில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி எப்போது நடைமுறைக்கு வருமென்பது குறித்த தகவல் இதுவரையில் இல்லை. இருப்பினும் இந்த அனுமதி வியப்பளித்தாலும் பலர் இதற்கு தங்களது வரவேற்பை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *