இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்த திட்டம்!

இந்திய ரூபாவை இலங்கையுடனான எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரகம் இது தொடர்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வங்கிகள் சுற்றுலாவுக்கான செயல்முறையை செயல்படுத்தும் கணக்குகளைத் தொடங்கிய பின்னர், வர்த்தகம் மற்றும் மூலதன பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்னெடுத்துச் செல்வதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்திய மத்திய வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி 2022 இல் இந்த செயல்முறையை செயல்படுத்திய பின்னர், இலங்கை வங்கி, ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை ஏற்கனவே இந்திய ரூபாயில் வோஸ்ட்ரோ கணக்குகளை ஆரம்பித்துள்ளன.

இந்தநிலையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில், மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சியின் நன்மையான தாக்கம், மற்ற துறைகளுக்கும் அதனை விரிவுப்படுத்த உதவும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *