பெருவில் 63,000 பறவைகள், 716 கடற்சிங்கங்கள் திடீர் மரணம்!

 

பெருவில் பறவைக்காய்ச்சல் தீவிரமடைந்து பறவைகள் தொடர்ந்து மரணமடைந்து வருதாக தெரியவந்துள்ளது.

பறவைக்காய்ச்சல் என்பது குளிர்கால மாதங்களில் பறவைகளுக்கு பரவக்கூடிய ஒரு வகையான தொற்றுநோய்.

இது பறவைகளிலிருந்து பாலூட்டிகளுக்கும் பரவக்கூடியது. தென் அமெரிக்கா நாடான பெருவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இதில் பெருவின் தலைநகர் லிமா மற்றும் வடக்கு கடலோர பகுதிகளில் பறவைக் காய்ச்சலால் கடல் சிங்கங்கள், பெலிகான் பறவைகள், நீர்நாய்கள், பூனைகள் மற்றும் கிரிஸ்லி கரடிகள் பாதிப்படைந்துள்ளன. இதுவரை 716 கடல் சிங்கங்கள் மற்றும் 63000 க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வட அமெரிக்காவிலிருந்து பறந்து வரும் புலம்பெயர்ந்த பறவைகளால் உள்ளூரில் பறவைக் காய்ச்சல் வருகிறது என்றும், தேசிய வனவியல் பூங்கா மற்றும் கடற்கரையில் உள்ள கடல் சிங்கங்கள் மற்றும் கடற்பறவைகளைத் தொட வேண்டாம் என்றும் பெருவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை தொட வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சகம் மக்களை எச்சரித்துள்ளது. இதனிடையே நாட்டின் பிற பகுதிகளுக்கும் பறவை காய்ச்சல் வேகமாக பரவும் என்பதால் தேசிய சுகாதார அவசரநிலை இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *