அஜித்- ஷாலினி காதல் எப்படி மலர்ந்தது?

சினிமாவில் காதல் திருமணம் என்றால் பஞசம் இல்லாத அளவிற்கு ஆகிவிட்டது. அப்போதைய சினிமாவில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் யோசிக்காமல் வாயில் வரும் பெயர் அஜித் – சாலினி என்று சொல்வார்கள். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றார்கள்.

சினிமாத்துறையில் ஒருவரையொருவர் உணர்வுபூர்வமான காதலித்து விட்டு பிறகு விவாகரத்து செய்து கொள்ளும் சம்பவங்கள் இன்றைக்கு அதிகம் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

அந்த ஜோடிகளுக்கு இடையில் அஜித்-சாலினி ஜோடி இன்னும் காதல் மாறாமல் அப்படியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் காதல் வாழ்க்கைப் பற்றிய சுவாரஸ்யமான கதை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.  

அஜித்-சாலினி காதல்
தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பேபிசாலினி. இவர் 55 படங்களில் தனது துறுதுறுப்பான நடிப்பால் நடித்து அசத்தியிருப்பார்.

ஆனால் கதாநாயகியாக 7 படங்களில் மாத்திரம் தான் நடித்திருந்தார். தமிழில் விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் அறிமுகமாகியிருந்தார். அந்தப் படத்திலே தனக்கென ஏராளமான ரசிகர் சம்பாதித்து விட்டார்.

அதற்குப் பின்னர் இரண்டாவது திரைப்படமாக அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போதுதான் இவர்களின் காதல் கதை ஆரம்பிக்கத் தொடங்கியது.

அமர்க்களம் திரைப்படத்தில் ஷாலினி “சொந்தக்குரலில் பாட” என்ற பாடலை முதல்முறையாக பாடியிருந்தார். அந்தப்பாடல் பதிவாகி முடிந்ததும் அஜித்துக்கு அதனை போட்டுக் காட்டியுள்ளார் இயக்குநர். அந்த பாட்டு அவருக்கு ரொம்ப பிடித்து விடவே தொடர்ந்து ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டே இருந்துள்ளார்.

இது இவ்வாறு தொடர்ந்து செல்லுகையில், அமர்க்களம் படத்திற்காக ஒரு காட்சியை ஊட்டியில் படமாக்கலாம் என சரணிடம் அஜித் கூறியிருக்கிறார். அதற்கு இயக்குனர் ஓகே தெரிவித்து உடனடியாக இருவரும் காரில் ஊட்டிக்கு சென்றுள்ளார்கள்.

அப்போது இருந்த சாலை வசதிக்கு ஊட்டிக்கு சாதாரணமாக 12 மணி நேரத்தில் தான் செல்ல முடியும். ஆனால் அஜித் 7 மணி நேரத்திலேயே சென்றுள்ளார். கிட்டதட்ட காரில் சென்ற 7 மணி நேரமும் ஷாலினி பாடிய “சொந்தக்குரலில் பாட” பாடல் நான் ஸ்டாப் ஆக திரும்ப திரும்ப ஒலித்துள்ளது.

இப்போது உள்ள லூப் மோட் ஆப்ஷன் எல்லாம் அப்போது இல்லை என்பதால் அந்த பாடலை கேசட்டில் 10 முறை கேசட்டில் பதிவு செய்து சரண் கொடுத்துள்ளார். அதேபோல் படப்பிடிப்பிலும் ஷாலினிக்கு அடிபட்டப்போது அஜித் துடித்துப் போயுள்ளார். இது அனைத்தையும் இயக்குனர் சரண் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். தனக்கான பெண் இவள் தான் என்று அறிந்த அஜித், நேராக ஷாலினியிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் அதற்கு எனக்கும் ஓகே என சாலினி காதலுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்.

2000ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்ட அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு 2008 ஆம் ஆண்டு தான் அனோஷ்கா என்ற மகளும், தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஆத்விக் என்ற மகனும் பிறந்தார்கள்.

கிட்டதட்ட 23 ஆம் ஆண்டு திருமண நாளை நெருங்கி கொண்டிருக்கும் இந்த காதல் ஜோடி எப்போதும் தமிழ் சினிமாவிற்கு சிறந்த ஜோடி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *