8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் நபர்!

8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் டாட்டு கலைஞர் தன் மனைவிகள் பற்றியும் தன் வாழ்க்கை ரகசியங்களையும் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

8 திருமணம்

ஒரு திருமணம் முடித்து அவரை திருமணம் செய்து சமாளிக்க முடியாமல் திணறும் ஆண்களுக்கிடையே ஒருவர் 8 திருமணம் செய்து அந்த 8 மனைவிகளுடனும் ஒரே வீட்டில் வாழந்து வரும் சம்பவம் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறத

தாய்லாந்தை சேர்ந்த டாட்டூ கலைஞர் தான் ஓங் டாம் சோரோட். இவர் பிரபல தாய்லாந்து நகைச்சுவை நடிகருடனான நேர்காணலின் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார்.

இவர் எட்டு இளம் பெண்களை திருமணம் செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருவதாக பகிர்ந்திருப்பார். தனது யூடியூப் சேனலில் 8 மனைவிகளையும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.

காதல் கல்யாணம்

இந்நிலையில், ஓங் டாம் தன் முதல் மனைவியை நண்பரின் திருமணத்திலும், இரண்டாவது மனைவியை மார்க்கெட்டிலும், மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும் மற்றும் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மனைவிகளை சமூக வலைத்தளங்களில் வைத்து பழகியிருக்கிறார்.

இவ்வாறு அவர்களுடன் பழக்கமாகி காதல் வயப்பட்டு திருமணம் செய்துக்கொண்டார். இதில் இரண்டு மனைவிகள் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் முதல் மனைவிக்கும் இவருக்கும் ஒரு மகன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த 8 மனைவிகளுடன் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கொண்டாட்டமான வாழ்க்கைக்கு கணவனும், மனைவியும் புரிந்துக் கொண்டாலே போதும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *