கணவன்,மனைவிக்குள் சிறந்த வயது வித்தியாசம் என்ன தெரியுமா?

 

வயது வித்தியாசம் என்பது உறவில் முக்கியமான ஒன்றாக உள்ளது. காதலுக்கு வயது தடையாக இருக்காது என்றாலும், கல்யாணம் என வரும்போது வயது வித்தியாசம் கொஞ்சம் இடிக்கிறதே என சிலர் இழுப்பார்கள். உண்மையில் கணவனுக்கு மனைவிக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்? சிலருக்கு, 2 ஆண்டு வித்தியாசம் நன்றாக வேலை செய்கிறது. சிலர் 5 முதல் 10 ஆண்டுகள் இடைவெளி கூட ஓ.கே என்கிறார்கள். பெரும்பாலான வெற்றிகரமான திருமணங்களை பொறுத்தவரை, சரியான வயது வித்தியாசத்தை கொண்டுள்ளன. வயது வித்தியாசம் எவ்வளவு இருந்தால் கணவன் மனைவி நெருக்கம் அதிகமாகும் என்பதை இங்கு காணலாம்.

வயது வித்தியாசம்

தம்பதிகளுக்கு இடையே 2 வயது முதல் 4 வரை வயது வித்தியாசம் இருந்தால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். ஆனாலும் 7 முதல் 10 வயது வரை என்பது கொஞ்சம் சிக்கல் தான். ஏனெனில் இதில் ஒருவருக்கொருவர் ரசனை வித்தியாசம் இருக்கும். அதிகமான புரிதல் தான் அவர்களை வழிநடத்தும்.

10 ஆண்டுகள்

திருமணத்தில் தம்பதிகளில் ஒருவர் எப்போதும் வயது முதிர்ந்தவராக இருப்பார். அந்த நபர் தான் திருமணம் முறிந்து போகாமல் பார்த்து கொள்வார்கள். வாழ்க்கைத் துணைகளுக்கிடையே போதுமான அன்பும் புரிதலும் இருந்தால் 10 வயது வித்தியாசம் கூட பொருட்டில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கை இலக்குகள், லட்சியங்களை ஒன்றாக இணைக்கும்போது, ​​10 ஆண்டு இடைவெளி பெரிதாக தெரியாது.

20 ஆண்டுகள்

சில நேரங்களில், வயது குறைந்த துணை என்றால், வயது முதிர்ந்த நபருடன் செட் ஆகாமல் சிக்கல்களை உருவாக்கலாம். சுமார் 20 வயதுக்கு மேற்பட்ட வயது வித்தியாசம் திருமணத்திற்கு ஏற்றதல்ல. இந்த வயது வித்தியாசத்தில் பிரபலமான தம்பதிகள் பலர் இருந்தாலும், எதார்த்த வாழ்க்கையில் இதில் வேறுபாடுகள் அதிகமாக இருக்கலாம். அவர்களுடைய இலக்குகள், லட்சியங்கள், கருத்துக்களில் பெரும் மாற்றம் ஏற்படும். 20 வயது வித்தியாசம் என்பது சிக்கல் தான்.

முக்கிய பிரச்சனை

குறிப்பாக வயது வித்தியாசம் என்பது குழந்தைகளைப் பெறுவதற்கான தேவையில் முக்கிய பங்காற்றும். வயது மூத்த மனைவி/ கணவன் விரைவில் குழந்தைகளைப் பெற விரும்பலாம். ஆனால் வயது குறைந்த மனைவி/ கணவன் இதில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். அவர்களின் சிந்தனை நிலைகளில் உள்ள வேறுபாடு சிக்கலை ஏற்படுத்தலாம்.

0 முதல் 3 ஆண்டுகள்

பொதுவாக, அதிக வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகம். சிறிய வயது வித்தியாசம் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் 10 வயதுக்கு மேல் வயது வித்தியாசம் இருந்தாலே அவர்களுக்குள் தலைமுறை இடைவெளி வந்துவிடும். இதனால் பிரச்சனைகள் தலைதூக்கும். ஆய்வுகளின்படி, ஒரே வயது அல்லது 2 முதல் 3 வயது வித்தியாசம் கணவனுக்கு மனைவிக்கும் இருப்பது நல்லது. அதிகபட்சமாக 5 அல்லது 6 வயது வித்தியாசம் இருந்தால் நல்லது என ஆய்வுகள் சொல்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *