நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவீடு என்பது எவ்வாறு எடுக்கப்படுகிறது?

நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு என்பது பூமிக்கு அடியில் உள்ள பாறை தட்டுகள் ஒன்றோடொன்று உராய்வதன் மூலம்,அல்லது ஒன்றின் மேல் மற்றொன்று சறுக்குவதன் மூலம் பூமியின் மேற்பரப்பில், லித்தோஸ்பியரில் திடீரென ஆற்றலை வெளியிடுவதன் காரணமாக அதிர்வு அலைகளை உருவாக்குகின்றன.இந்த நிகழ்வின் விளைவாக பூமியின் மேற்பரப்பில் நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு ஏற்படுகிறது.

இதன் விளைவால் உருவாகும் அதிர்வலையானது நிலத்தின் ஊடே பயணித்து நிலநடுக்கம் ஏற்படும் ஹைபோசென்டரில் இருந்து ஒரு அலை வடிவில்,அவ்விடத்திற்கு ஒட்டியுள்ள இடங்களுக்கும் பரவுகிறது.

நிலநடுக்கம் கண்டறிய பயன்படும் முறைகள் என்ன ?

நிலநடுக்கத்தின் தன்மை அல்லது வீரியத்தை விஞ்ஞானிகள்
ரிக்டர் அளவீடு,
மெர்கல்லி அளவீடு,
மொமெண்ட் மக்னிடியுடு அளவீடு ஆகிய மூன்று முறைகளில் கணக்கீடு செய்கின்றனர்.

1935 ஆம் ஆண்டு தெற்கு கலிபோர்னியாவில் சார்லஸ் ரிக்டர் என்பவரால் முதல் முறையாக இந்த பூகம்ப அளவீடு கண்டுபிடிக்கப்பட்டது.
ரிக்டர் அளவுகோல் என்பது 1 to 10 வரை அளவீடு அமைக்கப் பட்டிருக்கும்.அது மடக்கை logarithmic அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதாவது பத்தின் மடங்காக ரிக்டர் அளவில் 6 என்பது 5 அளவை காட்டிலும் பத்து மடங்கு அதிகம் கொண்டது ஆகும்.

இப்போது பூகம்பத்தின் அளவை மதிப்பிடுவதற்கு,அதாவது பூகம்பத்தின் போது வெளியிடப்படும் ஆற்றலின் அளவை மதிப்பிடுவதற்கு, ‘seismometer’ மூலம் கணக்கீடு செய்கின்றனர்.இது நிலத்தில் ஏற்படும் சலனம் அல்லது இயக்கத்தை அளவிட உதவுகிறது.நில அதிர்வின் பொழுது பூமியின் ஊடே பரவும் அதிர்வு ஆற்றலானது ‘சீஸ்மிக் வேஸ்’ ஆக சிஸ்மோமீட்டரில் கணக்கிடப்படுகிறது.

இந்த seismometer கருவியில், நிலநடுக்கத்தின் பொழுது, நில அதிர்வு அலைகளால் தோன்றும் நில அசைவுகளின் பதிவு நில அதிர்வு வரைபடம் எனப்படும் ‘seismograph’ ஆகும்.இந்த வரைபடத் தரவை கொண்டு ரிக்டர் அளவீடு (Richtor & moment Magnitude scale – Mw அளவீட்டில் ) கண்டறியப் படுகிறது.

நிலநடுக்கம் அளவிடப்படுவது எப்படி?

ஆய்வு மையத்தில் பூமியில் தோன்றும் நில அதிர்வு அலைகள் காரணமாக,நில அதிர்வு வரைபடம்
மூலம் ஏற்படும் அதிர்வுகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுவதன் மூலம்,நில அதிர்வுகளின் அளவீடு கண்டறியப்பட்டு, அவை கணினித் திரையில் நில அதிர்வு வரைபடங்களாகக் காட்டுகிறது.

இந்த seismometer கருவி மூலம் நிலத்தின் உண்மையான இயக்கத்தை மூன்று பரிமாணங்களிலும் பதிவு செய்திட நிலஅதிர்வு நிபுணர்கள் மூன்று தனித்தனி சென்சார் உணரிகளைப் பயன்படுத்து கின்றனர்.ஒவ்வொரு சென்சார் அதிர்வுகளையும் வெவ்வேறு திசையில் பதிவு செய்கிறது. இதில் Z கூறு மேல்/கீழ் இயக்கத்தையும்,
E கூறு கிழக்கு/மேற்கு இயக்கத்தையும்
N கூறு வடக்கு-தெற்கு இயக்கத்தையும் அளவிடுகிறது.

நில அதிர்வு அலைகளில் பி-அலைகள் மற்றும் எஸ்-அலைகள். என்ற இரண்டு அடிப்படை வகைகள் உள்ளது.இதில் பி-அலைகள் என்பது
நீளமான அலைகள் ஆகும்.
அவை வேகமாகப் பயணிக்கின்றன.S அலைகள் குறுக்கு அலைகள் ஆகும், அதன் இயக்கம் பயணத்தின் திசைக்கு செங்குத்தாக உள்ளது.S- அலைகள் பி-அலைகளை விட மெதுவாக இருக்கும்.நிலநடுக்க ஆய்வியலாளர்கள் பூகம்பங்களைப் பற்றி ஆய்வு செய்து, குறிப்பிட்ட பூகம்பத்தின் தன்மை,தீவிரம் குறித்து தீர்மானிக்க இந்தத் தரவு உதவுகிறது.

அதே போல் நிலநடுக்கத்தின் மையப்பகுதியைக் கண்டறிய விஞ்ஞானிகள் முக்கோணத்தைப்
போன்ற வரைபடத்தினை பயன்படுத்துகின்றனர்.இந்த முறையில் குறைந்தபட்சம் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து நில அதிர்வு தரவுகள் சேகரிக்கப்பட்டு, அந்த மூன்று தரவுகளின் வட்டமும், வெட்டும் மையத்தையும் கணக்கிடு கின்றனர்.ஒவ்வொரு பூகம்பமும் வெவ்வேறு திசைகளில் அமைந்துள்ள பல நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *