30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து பொலிஸாருக்கு புகார் அளித்த விமானி!

பறக்கும் விமானத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி ஒருவர் அப்போது பணியில் இருந்த பணிப்பெண் தொடர்பில் பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் நுழைந்து நடவடிக்கை முன்னெடுத்தனர்.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய 41 வயது விமான ஊழியர் அதிக அளவு மது அருந்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த ஊழியர் பயணிகளுக்கு உதவவும் பணியாற்றும் நிலையிலும் இல்லை என்றே விமானி புகாரில் தெரிவித்துள்ளார்.விமானத்தின் பாதுகாப்புக்கும் பயணிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தான் விமான் ஊழியரின் பணி, ஆனால் தனது பணியை அவர் முன்னெடுக்கவில்லை என விமானி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனையடுத்தே, 30,000 அடி உயரத்தில் இருந்து, பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளதாகவும், தயார் நிலையில் இருக்க கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணையில், அதிகாரிகள் உறுதி செய்த விடயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், அதிகாரிகள் விமானத்திற்குள் நுழைந்து விசாரணை முன்னெடுத்தனர். சுமார் ஒரு மணி நேரம் விமானம் பூட்டப்பட்டிருந்தது.மேலும், சம்பவத்தின் போது பணியில் இருந்த அனைத்து ஊழியர்களிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வழக்கில் சிக்கிய அந்த விமான பணிப்பெண் போதை மருந்து பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது, ஆனால் பொலிஸார் அதை உறுதி செய்யவில்லை.

கைது செய்யப்பட்ட அந்த விமான ஊழியர், பிணையில் விடுவிக்கப்பட்டாலும், விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *