TikTok சவாலால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! 

மெக்சிகோ உட்பட உலகின் பல பகுதிகளில் பரவலாக மெற்கொள்ளப்படும் TikTok சவாலால் பாடசாலை மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுப்படுத்தப்பட்ட மருந்து ஒன்றை உட்கொண்டு மற்றவர்களை விட நீண்ட நேரம் விழித்திருக்கவேண்டும் என்பதே TikTok சவாலாகும.

Clonazepam என்ற அந்த மருந்து வலிப்பு, மனப்பதற்றப் பிரச்சினைகள் முதலியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மெக்சிகோ சிட்டியில் ஒரு பாடசாலையில் அந்த சவாலில் ஈடுபட்ட  ஐந்து மாணவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது. அவர்களில் யாருக்கும் மோசமான பாதிப்பு இல்லை.

எனினும் TikTok தளத்தில் பலரும் Clonazepam மாத்திரைகளை உட்கொண்டு அதன் பின்விளைவுகளைக் கவனிக்கும் காணொளிகள் பரவலாகப் பகிரப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *