முகக்கவசம் அணியுமாறு WHO கோரிக்கை!

உலகம் முழுவதும் நீண்ட விமானப் பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் முகக்கவசம் அணிவதற்கு நாடுகள் பரிந்துரைக்கவேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

XBB.1.5 எனும் புதிய துணைரக ஓமக்ரோன் கொரோனா அமெரிக்காவில் வேகமாகப் பரவும் வேளையில் நிறுவனம் அவ்வாறு கேட்டுக்கொண்டது. 

ஐரோப்பாவிலும் அந்த கொரோனா பரவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதிகமான COVID-19 பரவல் உள்ள இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு முகக்கவசம் அணிவதற்கான பரிந்துரை விடுக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பாவுக்கான உலகச் சுகாதார நிறுவனத்தின் மூத்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓமக்ரான் வகைக் கொரோனாவில் XBB.1.5 ஆக வேகமாகப் பரவக்கூடியது. 

அமெரிக்காவில் ஜனவரி 7ஆம் திகதி முடிவுற்ற வாரத்தில் பதிவான கோவிட் சம்பவங்களில் சுமார் 28 சதவீதத்திற்கு அதுவே காரணமாகும்.

புதுவகைக் கொரோனா மீண்டும் உலகளவில் நோய்ப்பரவல் ஏற்படுமா என்பது தற்போதைக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறினர். 

எனினும் தற்போதுள்ள தடுப்புமருந்துகள் கடுமையான பாதிப்பையும் மரணத்தையும் தவிர்க்க உதவும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *