தாம்பத்திய வாழ்க்கை இல்லாமல் கணவன் மனைவியால் வாழ முடியுமா?

ஓரு தென்னிந்தியனாக எனக்குத் தெரிந்து ஒரு கணவன் என்ற ஆணை விட மனைவி என்ற பெண்ணால் சுலபமாக தாம்பத்தியமின்றி வாழ முடியும் என்று நினைக்கிறேன்.

காமம் என்பது பெரும்பாலும் ஆணி்ற்கு ஒரு ஒரு தவிப்பிற்கான வடிகால் போன்றது. அவனிடம் தேங்கியுள்ள சுக்கிலம் வெளியேறியவுடன் அவன் அக்காமம் தலைக்கேறிய நிலையிலிருந்து தன்னிலைக்கு வந்து விடுவான். கலவியில் ஆணுக்கு பெரிய ஆபத்து எதும் பொதுவாக இருப்பதில்லை. முதல் முறைக்கும் முந்நூறாவது முறைக்கும் அது ஏன் முவாயிரமாவது முறைக்கும் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால் ஒரு ஆணுக்கு தாம்பத்தியம் அடிக்கடி தேவைப்படுகிறது.

ஆனால் ஒரு பெண்ணுக்கு முதல் முறை என்பது மிகவும் பதட்டமும் ,அமைதியின்மையும்,உறுப்புக்குள் வலியும் கொண்ட தருணம். முக்கியமாக இந்தியா போன்ற நாடுகளி்ல்,திருமணத்திற்குப்பிறகு,இது ஒரு திருப்புமுனை. மன்னியுங்கள் எனக்கு மற்ற நாடுகளைப்பற்றி எதுவும் தெரியாது. இதன் பிறகு அப்பெண் அந்த அதிர்ச்சியான உறவை இன்பமாக்கிக்கொள்ளப் பழகிக்கொள்கிறாள்.

ஆனால் ஆணைப்போலில்லாமல் பாதுகாப்பற்ற கலவி பெண்ணுக்கு கர்ப்பம்,வலி,வேதனை என்று எப்போதும் மிகுதியான அச்சத்தை அளிக்கிறது.மேலும் குழந்தை வளர்ப்பு,வீட்டுவேலை,வீட்டு விலக்கு போன்ற பல காரணங்களினால் தாம்பத்தியத்தின் மேலுள்ள ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிடுகிறது. எனக்குத் தெரி்ந்தவரை பெரும்பான்மையான பெண்கள் கணவனின் வற்புறுத்தினால்தான் அடிக்கடி தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் நோக்கம் ஒன்று கணவனைத் திருப்திப்படுதுவது அல்லது பெரும்பாலும் அவள் பிரியப்படும்/ஆசைப்படும் தாம்பத்தியத்தை தாண்டிய பொது இல்லற வாழ்க்கைக்கு கணவனை தன்பக்கம் நகர்த்திச்செல்ல அதை ஒரு யுக்தியாக கையாளுகிறாள்.

இதற்கு மேல் தாம்பத்தியம் தென்இந்தியப் பெண்களுக்கு மிகமுக்கியமாக காணப்படுவதிலை.. அதுவும் இந்த 20 அல்லது 30 வருடங்களில் முதலில் தொலைகாட்சியும் பின்னர் 10–15 வருடங்களாக வலை காட்சியும்,அலைபேசியும் கொணர்ந்த ஒரு கிறக்கம் தான் இப்பொழுதுள்ள புதியவகை கலவிப்புரட்சி.

ஆதலால் என்னை பொறுத்தவரை திருமணம் ஆன ஆண்கள் தாம்பத்தியமின்றி ஒரு தவிப்புடன் வாழ்வார்கள் ஆனால் பெண்களோ வயது செல்லச்செல்ல தாம்பத்தியமின்றி எவ்வித தவிப்பின்றி வாழமுற்படுவார்கள். பெண்கள் கலவியில் துய்த்து வாழ்ந்ததை நினைத்தே வாழ்ந்துவிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *