அமிதாப்பச்சன் பேரன் ஷாருக்கான் மகளுடன் காதல்!

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் மகளான ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தாவிற்கும், ஷாருக்கான் மகன் சுஹானா கானுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இவர்கள் இருவரும் தற்போது “தி ஆர்ச்சீஸ்” என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில்  ஜான்வி கபூரின் சகோதரி குஷி கபூர், வேதாங் ரெய்னா, யுவராஜ் மெண்டா உட்படப் பலரும் நடித்துள்ளனர்.   

இந்த திரைப்படத்தில் இவர்கள்  இணைந்து நடித்ததன் மூலம் சுஹானா கான் மற்றும் அகஸ்தியா நந்தா இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அகஸ்தியா கபூர் குடும்பத்தின் கிறிஸ்துமஸ் விருந்திற்கு சுஹானா கானை  அழைத்துச் சென்றதாக தெரிகிறது. மேலும், அகஸ்தியா நந்தாவின் தாயார் ஸ்வேதா பச்சனுக்கு சுஹானா கானை பிடித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *