பாலியல் லஞ்சத்துக்கு இனி கடும் தண்டனை!

பாலியல் லஞ்சம் கோருவோருக்கு எதிராக அரசு இனி கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதைக் குற்றமாக அங்கீகரிக்கும் அவரது யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எல்லா வகையான பாலியல் தொந்தரவுகளையும் குற்றமாக அங்கீகரிக்கும் யோசனை ஒன்றை அமைச்சர் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
அதில் புதிதாக பாலியல் லஞ்சம் கோரலையும் குற்றமாக அங்கீகரிக்கும் பிரிவு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த எல்லா யோசைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.