இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா திட்டம்!

இலங்கையில் குடியிருப்பு சொத்துக்களை வைத்திக்கும் வெளிநாட்டவர்களுக்காக நீண்ட கால வதிவிட விசா திட்டத்தை முதலீட்டுச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய, இந்த விசா வழங்கும் நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, முதலீட்டுச் சபை பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம் வீரகோன் மற்றும் பலர் தலைமையில்  நடைபெற்றது.

இலங்கையில் வசிக்க விரும்பும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில், அரசாங்கம் புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

குடியிருப்பு அலகுகளில் முதலீடு செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட பணத்தின் அளவு மற்றும் சொத்தின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நீண்ட கால வதிவிட விசா வழங்கப்படவுள்ளது.

புறநகர் குடியிருப்புகளில் 75,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கும் 5 ஆண்டு வரி விலக்கு கிடைக்கும். 

ஏறக்குறைய 5,000 அடுக்குமாடி குடியிருப்புகள், மலிவு விலையில் இருந்து சூப்பர் ஆடம்பரம் வரை,முதலீட்டு சபையினால் நிறைவு செய்யப்பட்டுள்ளன.. இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் குடியிருப்பு அலகுகளை கொள்வனவு செய்வதே தற்போதைய போக்கு,

புதிய அமைப்பு, தொடர்புடைய முகவர்கள் மற்றும் அமைச்சுளுடனான பணியின் டிஜிட்டல் மாற்றத்தை வலுப்படுத்தும் என்றும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைக்கும் என்றும் முதலீட்டு சபை I நம்புகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *