நரபலி கொடுத்து உடலை சமைத்து சாப்பிட்ட தம்பதியினர்!

கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நரபலி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, நரபலி பெண் ஒருவரை சமைத்து சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா அடுத்த எலந்தூர் பகுதியை சேர்ந்த பக்வால் சிங் – லைலா தம்பதி விரும்பியுள்ளனர்.  

தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக செல்வம் கொழிக்க வேண்டும் என்று கருதி  கடவுளுக்கு நரபலி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதன்படி மந்திரவாதி ஒருவரின் உதவியுடன் இரண்டு பெண்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் இருவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மூடநம்பிக்கை மற்றும் சூனியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட இந்த தம்பதியினர் பெண்களைக் கொன்று உண்பதன் மூலம் அவர்களின் நிதி நெருக்கடி மேம்படும் என்று உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்படி தெருக்களில் லாட்டரி டிக்கெட் விற்று வந்த திருச்சூரை சேர்ந்த ரோசிலின் (49) மற்றும் தமிழகத்தின் தருமபுரியை சேர்ந்த பத்மா (52) ஆகியோர் இவர்களில் சதியில் சிக்கினர்.

குறித்த இரு பெண்களிடமும் மந்திரவாதியான ஷாபி லாவகமாக பேசி அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து இருவரையும் சித்ரவதை செய்து கொன்று நரபலி கொடுத்து பின்னர் புதைத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதல் பெண் ஜூன் மாதத்தில் காணாமல் போனார், இறுதி பாதிக்கப்பட்டவர் செப்டம்பரில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, சமைத்த மனித எச்சங்களை சாப்பிடுவது அவர்களின் இளமையை பாதுகாக்க உதவும் என்று மந்திரவாதி ஷாபி பக்வால் சிங் – லைலா தம்பதியிடம் கூறியுள்ளார்.

இதன்படி, நரபலி கொடுத்த பத்மா என்ற பெண்ணின் உடலை 56 துண்டுகளாக வெட்டி அந்த தம்பதியினர் கொஞ்சமாக சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த தகவலை கேட்டு கேரளா பொலிஸார் அதிர்ந்து போயுள்ளனர்.

இது குறித்து கொச்சி நகர பொலிஸ் ஆணையாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கொல்லப்பட்ட 2 பெண்களின் உடல்களின் அனைத்து பாகங்களையும் மீட்டுள்ளோம். உயிரிழந்த பெண் ஒருவரின் உடலின் பாகங்கள் அவர்கள் புதைக்கப்பட்டிருந்த மூன்று குழிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *