தாமதமாக உணவு உட்கொள்ளும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்!

உலகளவில் பரபரப்பான சூழலில் நேரம் தாழ்த்தியே சாப்பிடுபவர்களுக்கு பசி இருமடங்காகும் சாத்தியம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

உடற்பருமனான 16 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் Cell Metabolism எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

ஆரோக்கியமான அந்த பங்கேற்பாளர்கள் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொண்டவர்கள் என்றும் அவர்களுக்கு நீரிழிவு இல்லை என்றும் கூறப்பட்டது.

பின்னேரத்தில் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டவர்களுக்குப் பசி இருமடங்கானதாக ஆய்வில் தெரியவந்தது.

வயிறு நிறைந்திருக்கும் உணர்வை அளிக்கக்கூடிய leptin எனும் சுரப்பிநீரே அதற்குக் காரணம். முன்கூட்டியே சாப்பிடுவோருடன் ஒப்பிடுகையில் தாமதமாகச் சாப்பிடுவோருக்கு உற்பத்தியாகும் leptin சுரப்பிநீரின் அளவு குறைவாக உள்ளது.

அவர்களுக்கு ghrelin எனும் பசியை அதிகரிக்கும் சுரப்பிநீரின் உற்பத்தி அதிகரிக்கிறது. பின்னேரத்தில் சாப்பிடுவோர் குறிப்பாக மாவுச்சத்து, உப்பு சேர்க்கப்பட்டுள்ள உணவுவகைகள் ஆகியவற்றை விரும்புவதாகவும் கூறப்பட்டது.

நேரம் தாழ்த்திச் சாப்பிடுவோருக்கு உடற்பருமன் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிப்பதற்கு இது காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *