இஸ்ரேலிற்கு எதிராக போரில் களமிறங்கியுள்ள பாலஸ்தீன பெண்கள்!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் பாலஸ்தீன பெண்கள் மூவர் நேற்று(20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலியர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலில் தமது உயிரை மாய்ப்பதற்கு விரும்புவதாகக் குறிப்பிட்டு ஆயுதங்கள் மற்றும் குறிப்புக்களை வைத்திருந்த மூன்று பாலஸ்தீன பெண்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎஃப்) கைது செய்துள்ளது.
மேற்குக் கரையில் உள்ள அல்ஃபீ மெனாஷே என்ற இஸ்ரேலிய சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில், சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் போதே குறித்த மூவரும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்