முன்னாள் மாகாண சபை தவிசாளர்களுக்கு 1800 லீற்றர் எரிபொருள்?

தற்போது இயங்காத மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கு மாதாந்தம் மூன்று வாகனங்களுக்கு 1800 லீற்றர் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி சகல மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கும் மாதாந்தம் ஏழு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிட வேண்டியுள்ளதாக கணக்காய்வாளரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாகாண சபைத் தவிசாளர்கள், பத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதுடன், நான்கு பேருக்கு மாதாந்தம் வாகனம் ஒன்றுக்கு 240 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுகிறது.

தற்போது மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் குறிப்பிடத்தக்க கடமைகளைச் செய்வதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *