பேபி பவுடர் விற்பனை நிறுத்தம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு!

அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்க் அடிப்படையிலான பேபி பவுடரை 2023ம் ஆம் ஆண்டு முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் தனது சர்ச்சைக்குரிய டால்க் அடிப்படையிலான பேபி பவுடரின் விற்பனையை வரும் 2023ம் ஆண்டு முதல் நிறுத்துவதாக வியாழன்கிழமை அறிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடர்கள் குறிப்பாக பேபி பவுடர்கள் மீது 38,000க்கும் அதிகமான வழக்குகள் நுகர்வோர் மற்றும் உயிர் பிழைத்தவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.

சில வழக்குகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடர்களில் கல்நார்கள் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் பொருள்கள் இருப்பதாக குற்றம்சாட்டினர்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது விற்பனை நிறுத்திய போதிலும் அதன் தயாரிப்பு பாதிகாப்பானது என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இதுத் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தெரிவித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், ஜே&ஜே பேபி பவுடர் பாதுகாப்பானது, அஸ்பெஸ்டாஸ் இல்லை மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தும் உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்களின் சுயாதீனமான அறிவியல் பகுப்பாய்வுகளுக்குப் பின்னால் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் எனத் தெரிவித்தது.

இருப்பினும் அமெரிக்காவிலும் கனடாவிலும் விற்பனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திய ஜான்சன் நிறுவனம், உலக சந்தையில் தங்களது பொருட்களை விற்பனை செய்து வந்தது.

இந்தநிலையில் உலக தயாரிப்பு விற்பனையையும் நிறுத்துவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளாவிய போர்ட்ஃபோலியோ மதிப்பீட்டின் ஒற்றை பகுதியாக, அனைத்து சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் போர்ட்ஃபோலியோவிற்கு மாறுவதற்கான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *