லெஜன்ட் சரவணன் மகளின் திருமண செலவு 100 கோடி ரூபாவாம்!

தமிழ் சினிமாவில் புதுமுக நடிகராக பிரபல தொழிலதிபர் தி லெஜண்ட் சரவணன் களமிறங்கியுள்ளார்.

இவர் தி லெஜண்ட் என்ற பெயரில் ஒரு புதிய படம் நடித்துள்ளார்.

படமும் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவரின் மகளின் புகைப்படம் திருமண புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தி லெஜண்ட் சரவணனின் மகள் திருமணம் 2017ம் ஆண்டு ஜுன் 4ம் திகதி படு கோலாகலமாக நடந்துள்ளது.

மொத்த திருமணம் செலவும் சேர்த்து ரூ. 100 கோடிக்கு மேல் ஆனதாம். அவரது மகள் திருமண வரவேற்பிற்காக அணிந்த உடை மட்டுமே ரூ. 13 கோடியாம்.

1 உணவுக்கு 6000 ஆயிரமாமா?

தங்கம், டைமண்ட் கற்கள் பொறிக்கப்பட்டு அந்த உடை ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டதாம். அதோடு திருமணத்திற்கு வரும் ஒருவரின் உணவு செலவு மட்டுமே ரூ. 6000 ஆயிரமாம்.

சென்னையில் உள்ள ITC GRAND CHOLAவில் தான் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு பிரபல தொழிலதிபர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதோடு மணமகனுக்கு Rolls Royce காரும் பரிசளிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *