கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆடை ஏற்றுமதி வருவாய் 30%ஆல் அதிகரித்தமையை பாராட்டும் JAAF


கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மே 2022இல் ஆடை ஏற்றுமதி வருமானம் 446 அமெரிக்க டொலராக அமைந்திருந்ததுடன் அது 30% அதிகரிப்பாக அமைந்திருந்ததை அடுத்து, கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் சிறந்த பங்களிப்பைப் பாராட்டியது, நாட்டின் ஆடைத் துறையானது முன்னெப்போதுமில்லாத சவால்களை எதிர்கொண்டு அதன் இலக்குகளை அடைவதில் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருவதையும் பாராட்டியுள்ளது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 6% பங்களிப்பதோடு, அனைத்து ஏற்றுமதிகளில் ஏறக்குறைய பாதி பங்களிப்பை வழங்குவதால், ஆடைத் தொழில் தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைகிறது. ஆற்றல் வழங்கல் மற்றும் உற்பத்திப் பொருள் நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக தொழில்துறை தொடர்ந்து குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்வதால், துறையின் ஏற்றுமதி வருவாய் மே 2022க்குள் 16% முதல் 2.2% வரை வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த JAAF பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ், “2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொழில்துறையின் இலக்கான 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டுவோம் என்று நம்புகிறோம். எவ்வாறாயினும், முதலில் கடக்க வேண்டிய குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன என்பதை நாங்கள் நன்கு அறிவோம். எனவே, தொழில்துறையில் செயல்பாடுகளின் தொடர்ச்சிக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவது முக்கியம்.
“பெரிய ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைத் தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்வதைத் தவிர, அன்றாட நடவடிக்கைகளில் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் தொழில்துறையின் முக்கியப் பிரிவான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடை உற்பத்தியாளர்களுக்கான ஆதரவிற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். ” என அவர் தெரிவித்தார்.
நாடு தற்போது எதிர்கொள்ளும் முன்னெப்போதும் இல்லாத நிச்சயமற்ற நிலை, ஸ்திரமற்ற உலகளாவிய சந்தை நிலைமைகள் மற்றும் அதிகரித்து வரும் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திக்கான செலவுகள் போன்றவற்றுக்கு மத்தியிலும், இலங்கையின் ஆடைத் தொழில்துறையானது தேசிய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும், ஏற்றுமதி செயல்திறனில் உள்ள உயர் போக்குகள், ஜூன் 2022 வரை ஆண்டுக்கு ஆண்டு 17% வளர்ச்சியைப் பதிவு செய்தல் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (FDI) தொடர்ச்சியான வரவு காரணமாக இலங்கையில் ஆடைகள் தொடர்பான நேர்மறையான அணுகுமுறை இன்னும் நாட்டிற்குள் காணப்படுகின்றது. 94 மில்லியன் அமெரிக்க டொலர் ஆடை முதலீட்டில், 2022ஆம் ஆண்டில் ஆடைத் துறையின் விரிவாக்கத்திற்காக இதுவரை 73 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள முதலீடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *