யாழ்ப்பாணம்- பாண்டிச்சேரிக்கு இடையில் படகு போக்குவரத்து!

யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும் இடையில் படகு போக்குவரத்தையும் பலாலி – திருச்சி இடையில் மீண்டும் விமான சேவையினையும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையில் சாதகமான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், விரைவில் இந்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக மண்ணெண்ணெய், டீசல், எரிபொருள், உரம், பால்மா, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முயற்சிகளுக்கு ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் வழங்குகின்ற பூரண ஒத்துழைப்பிற்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்