விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!

மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
அதில் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று முல்தானில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் எடுத்தது. 306 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி 103 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் தொடரில் பாபர் அசாம் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து இருந்தார்.
இதைத்தவிர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தலைவராக அதிவேகமாக 1000 ஓட்டங்களை கடந்தவர் என்ற பெருமையையும் பாபர் அசாம் பெற்றுள்ளார். இந்த சாதனையை பாபர் அசாம் 13 போட்டிகளில் படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய தலைவராக இருந்த விராட் கோலி 17 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது.
இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 17 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *