மிகப்பழமையான மரம் கண்டுபிடிப்பு!

லகின் பல்வேறு பகுதிகளில் அறிய வகை மரங்கள் காணப்படுகிறது .இந்த நிலையில் சிலி நாட்டில் மிகப்பழமையான சைபர் மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரம் 5 ஆயிரத்து 484 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விஞ்ஞசானிகள் தெரிவித்துள்ளனர்.

தி கிரேஸ்ட் கிராண்ட் பாதர் என்று அழைக்கப்படும் இந்த பழங்கால மரம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சுமார் 4 ஆயிரத்து 853 ஆண்டுகள் பழமையான பிரிஸ்டில்கோன் பைன் மரத்தின் சாதனையை முடியடித்துள்ளது.

இந்த மரத்தின் சுற்றளவு சாதாரண மரங்களை போல் இல்லாமல் பல மடங்கு பரப்பளவு கொண்டதாக காணப்படுகிறது.பொதுவாக மரங்களின் வயதை அவற்றின் வளையங்களின் எண்ணிகையை கொண்ண்டு கணக்கிடலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த மரத்தின் மர வளையங்கள் கணக்கிட முடியவில்லை என விஞ்ஞசானிகள் தெரிவித்துள்ளனர் .மேலும் இது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *