இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான் ரோயல்!

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் இரண்டாவது தகுதிச் சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அகமதாபாத்-தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைப்பெற்ற ஐபிஎல்-லின் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்தப் போட்டிகான நாணய சுழற்றியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்யவே, முதல் பேட்டிங்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெசிஸ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறவே அணியின் மொத்த ஓட்டங்களின் வரவு எண்ணிக்கை குறைய தொடங்கியது.

இளம் வீரர் ரஜத் படிதரை தவிர மற்ற முக்கிய வீரர்கள் யாரும் ஓட்டங்களை சேர்க்க தவறியதை அடுத்து பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழந்து 157 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.

இதனைத்தொடர்ந்து இரண்டாவது பேட்டிங்கில் 158 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத்தொடங்கியது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் பெங்களூர் அணியின் வீரர்கள் வீசிய பந்துகளை மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிதறடித்தார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக வைக்கப்பட்ட 158 என்ற மொத்த இலக்கில் ஜோஸ் பட்லர் அவரது தனிபட்டமுறையில் மட்டும் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸருடன் 106 ஓட்டங்களை அணியின் வெற்றிகாக குவித்தார்.

இந்தநிலையில் ஜோஸ் பட்லர் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இந்த போட்டியில் அதிரடியாக சதம் விளாசியதன் முலம் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுடன் சண்டையிட மறுத்த ரஷ்ய வீரர்கள்: புடின் வழங்கிய பயங்கர தண்டனை!

இந்த போட்டியின் வெற்றியின் முலம் 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் ஞாயிற்றுக் கிழமை எதிர்கொள்ளவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *