புதுமணத் தம்பதியினர் 3 நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்க தடை!

திருமணத்தில் பல வினோதமான சடங்குகளை பின்பற்றுவதை கேள்விபட்டிருப்போம். அப்படி ருமணம் ஆன தம்பதி முதல் 3 நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்க கூடாது என்ற வினோத நடைமுறை இந்தோனேசியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தோனேசியா நாட்டில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு இடைப்பட்ட எல்லை அருகே வடகிழக்கு பகுதியான போர்னியோ என்ற இடத்தில் திடாங் பழங்குடியின சமூகத்தினர் வசிக்கின்றனர்.

வினோத நடைமுறை

அவர்களது முறைப்பட்டி, திருமணம் முடிந்த தம்பதியினர்கள் முதல் 3 நாட்களுக்கு கழிவறையை பயன்படுத்தக்கூடாது என்ற வினோத நடைமுறையை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த விதியை மீறும் தம்பதிக்கு பயங்கர விளைவுகள் ஏற்படும். அது என்னவென்றால், திருமண முறிவு, துணைக்கு துரோகம் செய்தல், இளம் வயதில் தம்பதியின் குழந்தைகள் உயிரிழப்பது போன்ற சோகங்கள் ஏற்படும் என்பது பழங்குடியினரின் நம்பிக்கையாக உள்ளது.

3 நாட்களுக்கு கழிவறைக்கு செல்ல தடை.. வினோத நடைமுறையால் புதுமண தம்பதிகளுக்கு தொடரும் அவலம்!

கடைப்பிடிக்க காரணம்

இதனால் தான் இளம்தம்பதியை கண்காணிக்க பலர் உள்ளனர். அதனால் குறைந்த அளவில் உணவும், தண்ணீரும் கொடுக்கப்படுமாம். 3 நாட்கள் முடிந்த பின்னர் அந்த தம்பதிகளை குளிக்க வைத்து, கழிவறையை பயன்படுத்த அனுமதி கொடுத்துவிடுவார்களாம்.

இந்த சவாலை சந்தித்து அதில் வெற்றி பெறும் தம்பதியின் திருமண வாழ்வே நீடித்திருக்க முடியும் என்றும் அதனை செய்ய தவறுபவர்களுக்கு திருமண வாழ்வில் துரதிர்ஷ்டம் வந்து சேரும் என்றும் நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *