“GOTA GO HOME” என்று கூறுவதை நிறுத்துமாறு கீதா வேண்டுகோள்!

ஜனாதிபதி பதவி விலகுவதற்கான  காலம் வந்ததுதும் அவர் அப்பதவியிலிருந்து விலகிவிடுவார். எனவே “கோட்டா கோ ஹோம்” என்று கூறுவதை உடனடியாக  நிறுத்துமாறு கலாசாரம் மற்றும் கலை நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற  அமர்வில் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வாக்குகளால் வெற்றிப் பெற்ற வந்த பின்னர் ஏன் கோ ஹோம் சொல்ல வேண்டும் .சிறிமாவோ பண்டாரநாயக்க, பிரேமதாச, ஜே.ஆர். ஜயவர்தன ஆகியோர் வீட்டுக்கு செல்லுமாறு கூறியபோது சென்றார்களா என வினவியுள்ளார்.

இளைஞர், யுவதிகள் தமது மன இறுக்கங்களிலிருந்து விடுபட காலி முகத்திடலுக்கு வருகைத் தருகின்றமை தொடர்பில் கவலையடைவதாகவும் இதன் பின்னணியில் நடக்கும் சில விடயங்கைளைப் பார்த்தால் குழந்தைகளை விற்று உண்ணும் வகையிலான குழு ஒன்று இருப்பதாகவே தெரிகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *