52 வயதில் பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகன்!

உலக அளவில் பல கலாச்சாரங்கள் இருந்தாலும் அண்டை நாடான இந்தியா அதன் பாரம்பரியமான கலாச்சாரத்திற்கு பெயர்பெற்றது. பல நாடுகளை சேர்ந்த மக்களும் இந்திய கலாச்சாரத்தில் வாழ ஆசைப்படுகின்றனர் என்றே கூறலாம். பல முற்போக்கான கொள்கைகள் அங்கு இருக்கும் அதே நேரத்தில் பெண்கள் மறுமணம் செய்துகொள்வது என்பது இன்றளவும் வெகு சிலரால் தவறான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தை இல்லாத ஒரு பெண் மறுமணம் செய்யும்போது அதை ஒப்புக்கொள்ளும் சமூகம் அதுவே குழந்தை உள்ள, தனிமையில் வாடும் ஒரு பெண் மறுமணம் செய்தால் அவரை தவறாக பேசுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் பிறந்து தற்போது துபாய் நாட்டில் வேலை செய்து வரும் ஜிமீத் காந்தி என்ற நபர் சற்று வித்யாசமாக செயலாற்றியுள்ளார். 52 வயதான கணவனை இழந்த தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ளார் அவர். கடந்த 2013ம் ஆண்டு 44 வயதான அந்த தாய் காமினி காந்தி தனது கணவரை இழக்க, மனம் வாடிப்போகிறார். கணவனை பிரிந்த சோகத்தில் இருந்த காமினிக்கு கடந்த 2019ம் ஆண்டு Thirds Stage Breast Cancer இருப்பது உறுதியானது. ஆனால் பல முறை கீமோ தெரப்பி எடுத்துக்கொண்ட நிலையில் அவர் உடல் நிலை நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்தது.

ஆனால் அதன் பிறகு பெருந்தொற்று நம்மை கொடூரமாக தாக்கிய நேரத்தில் காமினிக்கு Delta வகை தொற்று பாதிக்க உடல் ரீதியாகவும் மனதளவிலும் அவர் சோர்ந்துபோனார். மகனும் துபாய் நாட்டில் வேலை செய்துவருவதால் மும்பை நகரில் தனி மரமாக வாழ்த்து வந்துள்ளார் காமினி. இந்த நேரத்தில் தான் தனது நெருங்கிய குடும்ப நண்பரான கிரிட் பதியா என்பவர் மீது ஒரு நல்ல அபிப்ராயம் காமினிக்கு ஏற்பட்டு அவரோடு வாழக்கையை தொடர முடிவெடுத்துள்ளார்.

இறுதியில் இது குறித்து தனது மகன் மற்றும் உறவினர்களிடம் கேட்க அவர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் இந்த ஜோடிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினத்தன்று திருமணம் நடந்துள்ளது. தாயின் திருமண ஆசையை அவரது 52 வயதிலும் நிறைவேற்றி வைத்துள்ள அந்த மகன், தனது தாயின் திருமணம் குறித்து தனது LinkedIn பதிவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *