ஐரோப்பிய நாட்டிற்கு சொந்தமான கப்பல் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

கருங்கடலில் பயணித்த ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கு சொந்தமான டேங்கர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் Odessa நகரில் உள்ள துறைமுகத்திற்கு அருகே மால்டோவாவுக்கு சொந்தமான Millenium Spirit என்ற இரசாயன டேங்கர் கப்பல் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை மால்டோவா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கருங்கடலில் உள்ள ரஷ்ய கடற்படை, மால்டோவா கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஏவுகணை தாக்கியதை தொடர்ந்து கப்பல் தீ பிடித்து எரிந்த்தள்ளது, இதில் மீட்பு உபகரணங்கள் மற்றும் லைஃப் படகுகள் எரிந்து நாசமானது.

எனினும், குழுவினர் அனைவரும் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் கப்பலை விட்டு வெளியேறி உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கப்பலில் பயணித்த குழுவினர் அனைவரும் ரஷ்யர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான மால்டோவா நேட்டோ உறுப்பினர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கருங்கடலில் துருக்கிய சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இன்று மால்டோவா கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பதற்றத்தை அதகிரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *