“I Love You”என கூறுவது பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்குமா?நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

மும்பை வடாலா பகுதியினை சேர்ந்த 23 வயதான வாலிபர் மீது 17 வயதுடைய சிறுமியின் பெற்றோர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டின் போது புகார் ஒன்றை அளித்து இருந்தனர்.

இதில் சமபவம் நடந்த நாளன்று வாலிபர் வெளியே வந்திருந்த சிறுமியை பார்த்து கண் சிமிட்டியதுமாய், சிறுமியிடம் ஐ லவ் யூ கூறியதுடன் அதனை அறிந்து சிறுமியின் தாய் தட்டி கேட்க சென்ற போது அவரையும் மிரட்டியதாக சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுமியின் வீட்டினர் தரப்பில் வாலிபர் மீது பாலியல் ரீதியான வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த  போக்சோ நீதிமன்றமானது வாலிபர் மீதான சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவர் மீது தொடுத்து இருந்த அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மேலும் இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது, பாதிக்கப்பட்ட சிறுமியின் கூற்றுப்படி சம்பவத்தன்று வாலிபர் அவரிடம் “ஐ லவ் யூ” தெரிவித்தது தான், இதற்கு மாறாக அந்த வாலிபர் சிறுமியிடம் தனது காதலை வெளிப்படுத்தி துன்புறுத்தியதாக தெரியவில்லை என்கின்றனர்.

அவர் கூறியது தொடர்பாக அந்த பெண் மீது வாலிபருக்கு இருந்த அன்பான உணர்வை வெளிப்படுத்தியதாகவே தெரிகிறது. இதனை பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் நடந்ததாக கூற  முடியாது எனவும் தெரிவித்து இருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட வாலிபரானவர் பாலியல் குறித்த நோக்கத்துடன் பெண்ணுக்கு எதிராக எவ்வித செயலையும் செய்யவில்லை எனவும் , பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயருக்கு அச்சுறுத்தலை கொடுத்துள்ளார் என்பதற்கான ஆதாரத்தினை அரசு தரப்பினர் பதிவு செய்யாததால் சம்மந்தப்பட்ட வாலிபரை வழக்கில் இருந்து விடுவிக்கிறோம் என நீதிமன்றத்தின் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *