எரிவாயு தட்டுப்பாட்டால் நட்சத்திர ஹோட்டலுக்கு நுழைந்த விறகு!

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றின் சமையலறைக்கு பின்புறமாக, விறகு அடுப்புகளைக் கொண்டு சமையல் செய்யப்படுகின்றது.
முன்னணி ஹோட்டல்களில் ஒன்றான இந்த ஹோட்டலில், விறகுகளைக் கொண்டே சமைக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை அடுத்தே, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குள்ளும் விறகு அடுப்புகள் செல்வாக்கு செலுத்திவருகின்றன.