புத்தாண்டில் பெற்றோல் விலை குறைப்பு!
புத்தாண்டு பரிசாக ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை லீட்டருக்கு 25ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜார்கண்டில் தற்போது ஒரு லீட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 48 பைசாவாக இருந்து வருகிறது. எனவே, இந்த விலை குறைப்புக்கு பிறகு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், லீட்டருக்கு 73 ரூபாய் 48 பைசாவிற்கு விற்கப்படும். வரும் ஜனவரி 26ஆம் திகதி முதல் இந்த அறிவிப்பு அமுலுக்கு வரும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்