பொது முடக்கம் வேண்டும் மருத்துவர்கள் கோரிக்கை!

விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் போதுமானவையல்ல, பொது முடக்கம் வேண்டும் என கனடாவின் மனித்தோபா மாகாண மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

திங்களன்று மனித்தோபாவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால், அந்த கட்டுப்பாடுகள் மென்மையானவை, வரும் வாரங்களில் கொரோனா மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கட்டுப்பாடுகள் போதாது என மனித்தோபா முன்னணி மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தின தினம் முதலான மூன்று நாட்களில் மனித்தோபாவில் 2,154 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றியுள்ளதுடன், 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.

இந்நிலையில், நமக்கு பொதுமுடக்கம் தேவை என்று கூறும் வின்னிபெக் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவரும், மனித்தோபா பல்கலையின் Max Rady College of Medicine கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுபவருமான Dr. Eric Jacobsohn, ஏன் இன்னும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், Jacobsohn மற்றும் Horton என்பவர்கள் முதலான 10 மருத்துவர்கள், மனித்தோபா பிரீமியரான Premier Heather Stefanson மற்றும் அரசுக்கு, கடுமையாக விமர்சிக்கும் கடிதம் ஒன்றை எழுதினார்கள். மனித்தோபாவில் தீவிர சிகிச்சை மற்றும் பல மருத்துவ சேவைகளில் பல முன்னேற்றங்கள் தேவை என அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள்.

அவர்கள் குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளில், விடுமுறைக் கொண்டாட்டங்களுக்காக கூடுவோரின் எண்ணிக்கையைக் குறைத்து, குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கூட அனுமதித்தல், மனித்தோபாவுக்கு உதவுவதற்காக இராணுவ தீவிர சிகிச்சைப்பிரிவு பணியாளர்களை அனுப்புதல் ஆகியவை ஆடங்கும்.

அதைத் தொடர்ந்து, மனித்தோபாவுக்கு கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் எட்டு தீவிர சிகிச்சைப்பிரிவு செவிலியர்கள் அனுப்பப்பட இருப்பதாக பெடரல் அவர்சர் கால நடவடிக்கைகளை கவனிக்கும் அமைச்சரான Bill Blair அறிவித்தார். ஆனால், தங்களுக்கு 15 முதல் 30 செவிலியர்கள் வேண்டும் என மனித்தோபா மாகாணம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *