உலகில் உள்ள 5 மர்மமான இடங்கள்!

இந்த உலகில் உள்ள 5 மர்மமான இடங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1.) ISLAND OF DOLLS:

ISLAND OF DOLLS

இதை பொம்மைகள் தீவு என்று கூறுவார்கள். மெக்சிக்கோவின் தெற்கு பகுதியில் இந்த தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் அமைந்துள்ள மரங்களில் நிறைய பொம்மைகள் தொங்கவிடப்பட்டு உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். மெக்சிக்கோவில் அமைந்துள்ள இந்த தீவு ஆனது முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது.

2.) ISOLA LA GAIOLA:

ISOLA LA GAIOLA

இத்தாலியில் உள்ள ஒரு சபிக்கப்பட்ட தீவாக இது உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இதன் பாறை கரைகள் அனைத்தும் மரகத நீரால் சூழப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று வரையும் இந்த தீவை சாபடைந்த தீவாக கருதி அதை ஒதுக்கி வைத்துள்ளார்கள். குறிப்பாக இந்த தீவில் வீடு கட்டி வாழ வந்த யாரும் உயிருடன் இல்லை என்று கூறுகிறார்கள்.

3.) SEDLEC OSSUARY BONE CHURCH:

SEDLEC OSSUARY BONE CHURCH

இந்த தேவாலயம் ஆனது 40,000 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளால் கட்டப்பட்டுள்ளது. ஆம் அது உண்மை தான். இந்த தேவாலயத்தில் சிலுவைகள், நாற்காலிகள், அலங்கார பொருட்கள் போன்ற அனைத்தையும் மண்டை ஓடு, எலும்பு கூடு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கட்டியுள்ளார்கள்.

4.) CACHTICE CASTLE:

CACHTICE CASTLE

CACHTICE CASTLE பற்றி கூறினாலே நமக்கு ‘ELIZABETH BATHORY’ என்ற ஒரு பெண் பற்றிய நினைவு தான் வரும். இதுவரையிலும் உலகில் வாழ்ந்த இவரை போன்ற ஒரு ராட்சத பெண்மணியை யாரும் பார்த்திருக்க கூட முடியாது. சுமார் 650 க்கும் மேற்பட்ட கன்னிப்பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்தவர் தான் இந்த ‘ELIZABETH BATHORY’. இந்த பெண் செய்வது எல்லாமே மிகவும் கொடூரமாக இருக்கும். இந்த ‘CACHTICE CASTLE’ இடத்தை பூமியில் உள்ள மிகவும் பயங்கரமான இடம் என்று கூட கூறலாம். ஏனென்றால் மக்கள் இன்று கூட அந்த இடத்திற்கு செல்ல மிகவும் பயப்படுகிறார்கள்.

5.) POVEGLIA ISLAND:

POVEGLIA ISLAND

ஐரோப்பியாவில் உள்ள 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் அதிகமான பேய்கள் நடமாடும் தீவாக கூறப்படுகிறது. 1720-ஆம் ஆண்டில் ‘பிளேக்’ என்ற மிகப்பெரிய தொற்று நோயால் பல லட்சம் மக்கள் உயிரிழந்தார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்ட சிலரை மற்றவர்களுக்கு பரவ கூடாது என கருதி உயிருடன் எரிக்கப்பட்டார்கள். இறந்த லட்சக்கணக்கான மக்கள் மற்றும் சில உயிருடன் இருந்த மக்களின் உடல்களை இந்த தீவில் வைத்து எரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அதிகமாக பேய்கள் நடமாடும் தீவாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *