உலகில் இஸ்லாமிய அடிப்படைவாதமே மிகப் பயங்கரமானது ஞானசாரர் தெரிவிப்பு!

இன்றைய செய்திகள் – உலகில் உள்ள ஏனைய அடிப்படைவாதங்களை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பயங்கரமானது. அறிவியல், கலாசாரம்,மனித நேயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மனித குலம் பெற்றுக்கொண்ட வெற்றியின் பெறுமதியை பலவீனப்படுத்தும் தன்மை இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு உண்டு.

எமது நாட்டிலும் புரையோடி போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர்தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறோம். மத அடிப்படைவாதம் மாத்திரமல்ல ஏனைய அடிப்படைவாத செயற்பாடுகளின் பிரதிபலன் பாரதூரமானதாக காணப்படும்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது உலகில் உள்ள ஏனைய அடிப்படைவாதங்களை காட்டிலும் கொடூரமானது. அறிவியல், தொழினுட்பம், மனித நேயம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகள் பெற்றுக் கொண்ட வெற்றியின் பெறுமதியை பலவீனப்படுத்தும் தன்மையை இஸ்லாமிய அடிப்படையாதம் கொண்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் செயற்பாடுகள் மனித குலத்துக்கு அப்பாற்பட்டது. ஒருவரை துன்புறுத்தும்போது அதனை ஏனையோர் சுற்றியிருந்து காணொளி ஊடாக காட்சிப்படுத்தி மகிழ்வுறும் குறுகிய மனநிலையைக் கொண்ட சிந்தனைகள் அவர்கள் வசம் காணப்படுகிறது.

அந்தளவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் அவர்களை ஈர்த்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சாதாரணமாக கருத கூடாது.மனித நேயத்துக்கு முன்னுரிமை வழங்கி இப்பிரச்சினையை ஆழமாக நோக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் எவருக்கும் இனி ஏற்பட கூடாது என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *