பண்டைய காலத்து முறையில் தயாரிக்கப்பட்ட நானோ கார்!

நானோ கார் ஒன்றை ராஜா காலத்து ஸ்டைலில் மாற்றியது வரவேற்பை பெற்று வருகிறது. ஏழை மக்களும் பயன்படுத்த வேண்டும் என இந்தியாவில் வரப்பட்ட கார் தான் டாடா நிறுவனத்திம் நானோ கார்.

இந்த கார் ஆனது 3 லட்சத்துக்கும் குறைவாக மிக மலிவான விலையிலேயே விற்பனைக்கு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது.

இதனிடையே, இந்த காரை இளைஞர் ஒருவர் பழைய காலத்து ஸ்டைலில் விண்டேஜ் காராக மாற்றியமைத்திருக்கின்றார். அந்த காரின் ஸ்டைலில், ஸ்டியரிங் வீல், வேகத்தை குறிக்கும் மீட்டர் மற்றும் பிற அம்சங்களைக் கொண்டே இது நானோ கார்தான் என்பதை நம்மால் கண்டறிய முடிகின்றது.

நானோவின் வீல் முதல் கொண்டு வெளிப்புறத் தோற்றத்தின் அனைத்து பாகங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன. எஞ்ஜின் மற்றும் சேஸிஸ் போன்ற சில முக்கியமான பாகங்கள் மட்டுமே அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மேலும், இவை சேஸிஸிலும் புதிய தோற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. டாடா நானோ ஓர் மிக சிறிய ரக வாகனமாகும்.

ஆனால், தற்போது உருமாற்றத்தைப் பெற்றிருக்கும் இந்த வாகனம் சற்றே அதிக நீளம் கொண்டதாக காட்சி அளிக்கின்றது. கிளாசியான தோற்றத்திற்காக பண்டைய கால கார்களைப் போன்ற பேனல்கள், ஹெட்லைட்டுகள், டர்ன் இன்டிகேட்டர்கள், விண்ட் ஷீல்டு மற்றும் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

2009-ம் ஆண்டு ரூ. 1 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்த இந்த கார் இறுதியாக இந்தியாவை விட்டு வெளியேறும்போது ரூ. 2.97 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *