மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், தற்போது ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே, நியூயார்க்கில் கடந்த ஒரு மாத காலமாக நோய் தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சராசரியாக ஒரு நாளுக்கு மட்டுமே 300 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதாக அரசாணை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் மட்டுமே ஒரே நாளில் 6 ஆயிரத்து 200 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது தினசரி பாதிப்பு விகிதம் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனால், கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு நியூயார்க் மாகாணத்தில் பேரழிவு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாகாண கவர்னர் கேத்தி ஹோசுல் பிறப்பித்துள்ளார். மேலும் அவரின் அந்த உத்தரவில், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு, முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *