எட்டு இடங்களில் தாக்குதல் இடம்பெற இருந்ததாக புலனாய்வுத்துறை முன்னாள் தலைவர் தெரிவிப்பு!

2019 ஏப்பிரல் 21 ம் திகதி எட்டு இடங்களை இலக்குவைத்து தாக்குதல் இடம்பெறவுள்ளது என தனக்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்ததாக அரசபுலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜெயசுந்தர முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்ற அங்கு சாட்சியமளித்த நிலாந்த ஜெயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

20ம் திகதி 4.14மணிக்கு தாக்குதல் நடைபெறுவதற்கு 20 மணித்தியாலத்திற்கு முன்னர் எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
நான் இது குறித்து பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளர் ஏனைய அதிகாரிகளிற்கு தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

20ம் திகதி தொலைபேசி மூலம் பொலிஸ்மா அதிபருக்கு எனக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களை தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பொலிஸ்மா அதிபர் உடனடி நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை புலனாய்வு தகவல்களை தீவிரமாக எடுக்கவில்லை என நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

2019 ஏப்பிரல் 9 ம் திகதி இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஜஹ்ரான் குழுவினர் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என கிடைத்த தகவலை மறைக்கும் எண்ணம் எனக்கில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *