லண்டனில் உயிரிழந்த இலங்கையர்கள் தொடர்பில் முக்கிய தகவல் வெளியானது!

லண்டனில் தீ விபத்தில் சிக்கி இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயர்த்தை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய தலைநகரான லண்டனின் பெக்ஸ்லி ஹீதில் உள்ள குடியிருப்பு ஒன்றில், நேற்று (18) இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும், மகளும், மற்றும் மகளின் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது.

இதேவேளை, தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் திருகோணமலை சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விபத்தின் போது, குறித்த வீட்டின் ஜன்னல் வழியாக நபரொருவர் குதித்து தீக்காயங்களுடன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை வீட்டிலிருந்து குதித்த நபர் பெண்ணின் மைத்துனர் என்று கூறப்படுகிறது. அவருடைய உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியில், தீ விபத்து ஏற்பட்டவுடனே அந்த பெண் உடனடியாக வேலைக்கு சென்றிருந்த தன்னுடைய கணவருக்கு போன் செய்துள்ளார்.

Yogan என்று அறியப்படும் அவர் இது குறித்து அறிவதற்குள்ளே, குடும்பத்தினர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளார். இது குறித்து Yogan-ன் உறவினர் கூறுகையில், சம்பவ தினத்தன்று இரவு 8.30 மணியளவில் அவருடைய மனைவியிடம் இருந்து போன் அழைப்பு வந்தது.

மேலும் இச்சம்பவம் குறித்து Yogan பேசிய போது, மனைவி தீ மற்றும் நெருப்பு என்று ஒரு வித பயத்துடன் கூறிக் கொண்டிருந்த போதே போன் கட் ஆகிவிட்டது. இதையடுத்து உடனே அவர் செல்ல முயன்றார், ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறினார்.

தீ விபத்து ஏற்பட்ட தினத்தன்று உடனடியாக 6 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர். இதில் வீட்டின் தரைத் தளம் பாதி எரிந்துவிட்டதாகவும், முதல் தளம் முழுவதுமே இடிந்து விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *