ஈரான் மகளிர் கால்பந்தாட்ட அணியின் கோல்கீப்பராக விளையாடிய ஆண்!

ஜோர்தானிற்கு எதிரான கால்பந்தாட் போட்டியில் ஈரானின் மகளிர் அணியின் சார்பில் ஆண் ஒருவர் கோல்கீப்பராக விளையாடினார் என ஜோர்தான் குற்றம்சாட்டியுள்ளது.

செப்டம்பர் 25 ம் திகதி உஸ்பெக்கிஸ்தானில் இடம்பெற்ற ஜோர்தானிற்கு எதிரான்போட்டியில் கோல்கீப்பராக விளையாடியவர் ஆண் என ஜோர்தான் குற்றம்சாட்டியுள்ளது.

இவர் இரண்டு பெனால்டிகளை காப்பாற்றியதன் மூலம் ஈரான் ஆசிய கிண்ணணத்திற்கு தகுதி பெறுவதற்கு காரணமாக விளங்கினார்.

அவர் பெண்ணா என்பது குறித்து பரிசோதனை இடம்பெறுவதுஅவசியம் என ஜோர்தானின் கால்பந்தாட்ட அமைப்பின் தலைவர் இளவரசர் அலி பின் அல் ஹ_சைன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது பாரதூரமான விடயம் ஆசிய உதைபாந்தாட்ட சம்மேளனம் விழித்துக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஈரானின் முகாமையாளர் இதனை நிராகரித்துள்ளதுடன் ஜோர்தான் தனது தோல்விக்கான காரணங்களை தேடுகின்றது என குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரான் தெரிவுக்குழுவின் தலைவரும் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *