1971 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு இலவசமாக பொருட்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பு!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக 1971ஆம் ஆண்டு பிறந்த குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாக பொருட்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலவசமாக பொருட்களை கொள்வனவு செய்யும் இந்த வாய்ப்பை துபாயில் இயங்கும் Union Coop பல்பொருள் அங்காடி நிறுவனம் வழங்குகிறது.

1971ஆம் ஆண்டு பிறந்தவர்கள் குறித்த பல் பொருள் அங்காடிக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதுடன் அவர்கள் வழங்கும் Afdhal அட்டையை பயன்படுத்தி பொருட்களை இலவசமாக கொள்வனவு செய்ய முடியும்.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் Afdhal அட்டையின் பெறுமதி என்ன என்பது குறித்து நிபந்தனைகள் தொடர்பிலும் Union Coop பல் பொருள் அங்காடி நிறுவனம் இதுவரை தெளிவுப்படுத்தவில்லை.

இதனை தவிர தெரிவு செய்யப்படும் 50 வாடிக்கையாளர்களுக்கு கையடக்க தொலைபேசிகளும், மேலும் 50 பேருக்கு தங்க கட்டிகளும், மேலும் 50 பேருக்கு mountain bikeகளும் வழங்கப்படவுள்ளன.

இதனை தவிர 50,000 Tamayaz அட்டைதாரர்களுக்கு சிறப்பு புள்ளிகள் வழங்கப்படவுள்ளன.

அதேவேளை ஆயிரக்கணக்கான பொருட்களின் விலைகள் சுமார் 50 திர்ஹாம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *