மக்களின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி!

மக்களின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை மறந்து செயற்படுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அண்மைய சில தினங்களாக மக்களின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானதாகவும், அதிருப்தி அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடங்களுக்குச் செல்லும் போதும், பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் போதும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில தொழில் இடங்களில் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியதன் காரணமாகவே பாரிய பின் விளைவுகள் ஏற்பட்டதாகவும்,இதே நிலைக்கு மீண்டும் நாடு சென்றுவிடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *