சிறைத் தண்டனைக்குப் பின்னர் ஜெயலலிதாவை சந்திக்கிறார் சசிகலா!

சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த பெப்ரவரியில் விடுதலையான சசிகலா சிறைவாசத்துக்குப் பின் வரும் அக்டோபர் 16ஆம் திகதி ஜெயலலிதா நினைவிடத்தில் ஆழ்ந்த பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து, வரும் 17 ஆம் திகதி பொன்விழா காணும் அதிமுக தனது 50 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி, விடுதலையானதிலிருந்து கட்சியை கைப்பற்றுவதில் முனைப்பு காட்டி வரும் சசிகலா,  வரும் 17ம் தேதி அதிமுக பொன்விழா அன்று எம்ஜிஆர் நினைவு இல்லம் விசிட் செய்யும் சசி, பின்னர் ராமாவரம் எம்ஜிஆர் இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார், இதை முடித்துகொண்டு எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் சசிகலா அப்பள்ளி மாணவர்களோடு மதிய உணவை  அருந்துகிறார். இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகளை கவனித்து கொள்ளும் பொறுப்பு அமமுகவின் முன்னாள் தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்  என். வைத்தியநாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *