பைசர் தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 6 மாதங்களில் அதன் செயல்திறன் சரிவடைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பைசர் தடுப்பூசியால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையை நாடுவதும் இறப்பு எண்ணிக்கையும் 90% வரையில் குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டது.

ஆனால் தற்போது, பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுகொண்ட 6 மாதங்களில் அதன் செயல்திறன் குறைவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது 47% முதல் 88 சதவீதம் வரையில் உள்ளது எனவும், இதனால் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பைசர் மற்றும் Kaiser Permanente நிறுவனங்களே ஆய்வை முன்னெடுத்துள்ளன. இதில் 3.4 மில்லியன் மக்களில் Kaiser Permanente ஆய்வு முன்னெடுத்துள்ளது. கொரோனா மாறுபாடுகளை தடுப்பதில் பைசர் தடுப்பூசி துல்லியமாக செயல்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றே இந்த ஆய்வில் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டெல்டா மாறுபாட்டை தடுப்பதில் பைசர் தடுப்பூசி முதல் மாதத்தில் 93% செயல்திறன் கொண்டதாக இருந்தது எனவும், அனால் நான்காவது மாதத்தில் 53% என சரிவடைந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செயல்திறன் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதுடன், தவறான புரிதலுக்கும் வழிவகுக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தற்போது அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியை முதியவர்களுக்கு தரலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அனுமதிப்பது தொடர்பில் மேலதிக தரவுகள் திரட்டப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தரப்பு கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *