தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் ஆபத்து நீடிக்கிறது!

30வயதிற்கு உட்பட்டவர்கள் இன்னமும் பெருமளவில்தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாததால் கொவிட் ஆபத்து நீடிக்கின்றது – மருத்துவ அமைப்பு

நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், 30 வயதிற்குட்பட்டவர்களுள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாததால் கொவிட் -19 தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகம் உள்ளது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

20 வயதிற்கு மேற்பட்டவர்களில் 20% ஆனவர்கள் தடுப்பூசியை இன்னும் பெறவில்லை என அச்சங்கத்தின் தலைவரான வைத்தியர். பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியில், வைரஸ் பரவுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சமூகத்தில் மற்றொரு அலை தோன்றினால் நாடு தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும்.
எனவே, ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் போது மற்றுமொரு அலையைத் தடுப்பதற்காக சுகாதார விதிகள் மற்றும் வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை தொடர வேண்டும் மற்றும் பாரிய கூட்டங்கள் வரையறுக்கப்பட்ட காலம் வரை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *