விவாகரத்து விருந்தை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடிய 45 வயது பெண்!

45 வயதில் விவாகரத்து! கிராண்ட் பார்டி கொடுத்து 17 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்ட வினோத பெண்

லண்டனில் பெண் ஒருவர் விவாகரத்து பெற்றதிற்காக பிரம்மாண்டமாக பார்ட்டி கொண்டாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த சோனியா குப்தாவுக்கு (45) கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் முடிந்து கணவருடன் இங்கிலாந்திற்கு குடியேறினார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கையில் இருவரும் சந்தோஷமாக இல்லை என்று கூறப்படுகிறது.

எப்போதும் சண்டையும், சர்ச்சரவாக இருக்கும் வாழ்க்கையை வாழ பிடிக்காத சோனியா ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற விரும்பி கோர்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த விவாகரத்து வழக்கு 3 வருடங்களாக நீடித்த நிலையில், தற்போது தனது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை நினைத்து மகிழ்ச்சியை கொண்டாட கிராண்ட் பார்டியை ஏற்பாடு செய்தார்.

அந்த பார்டியில் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்து விருந்து அளித்தார். இவர் finally divorced என்ற பேண்டை அணிந்து கொண்டு பார்ட்டி முழுவதும் வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

விருந்தில் அந்த பெண்மணி கூறியது, நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். கடந்த 17 ஆண்டுகளாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த எனக்கு இன்று தான் நிம்மதியாக உள்ளது. இதனை நான் கொண்டாட நினைக்கிறேன் என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *