கொரோனா தொற்றிய மனைவியை கொலை செய்து திருமணம் செய்ய முற்பட்ட வர்த்தகர் கைது!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்யத் தயாராக இருந்த வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

இறந்த மனைவியின் சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் வர்த்தகர் திருமணத்தை நடத்தத் தயாராகி வந்ததாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது மனைவியின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பாதி எரிந்த தலையணை மற்றும் பேப்பர்களையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இந்த தம்பதிக்கு 13 மற்றும் 6 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கொரோனா தொற்று உள்ள பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் மூக்கு மற்றும் வாயில் இறுக்கம் ஏற்பட்டதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து, கணவர் பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு வரவழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரித்து, கொலை தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினார்.

மனைவி இறப்பதற்கு முன்பு பூக்கடையில் இறுதி சடங்கிற்கு கூட பணம் கொடுக்கப்பட்டது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *