அமெரிக்க விமானத்தில் இருந்து குத்துச்சண்டை வீரர் அமீர்கான் அதிரடியாக வெளியேற்றம்!

முகக் கவசம் சரியாக அணியாத காரணத்தினால் அமெரிக்க விமானத்திலிருந்து பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அதிரடியாக வெளியயேற்றப்பட்டுள்ளார்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் Newark-ல் இருந்து Dallas-Fort Worth-க்கு புறப்பட்ட விமானத்திலிருந்து 34 வயதான பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமீர் கான் மற்றும் அவரது நண்பர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து அமீர் கான் கூறியதாவது, Colorado Springs-ல் உள்ள பயிற்சி மையத்திற்கு செல்லும் போது இன்று பொலிசாரால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன்.
அதாவது, என் உடன் பயணித்த நண்பர்கள் சரியாக முகக்கவசம் அணியவில்லை எனவும், எனவே விமானத்தை உடனே நிறுத்த வேண்டும் எனவும், என்னையும், என் நண்பர்களையும் விமானத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் புகார் அளித்தனர்.

நான் எந்த தவறும் செய்யவில்லை. தற்போது நான் வேறு விமானத்தில் பயிற்சி மையத்திற்கு செல்கிறேன், இது உண்மையில் வேதனையாக உள்ளது.

நான் பயணிக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தடை செய்து விட்டது என அமீர் கான் தெரிவித்துள்ளார்.

ஆனால் சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கூறுகையில், இரண்டு பயணிகள் விமானக் குழுவினரின் கோரிக்கை ஏற்க மறுத்ததால், அவர்களை வெளியேற்ற புறப்பட்ட தயாரான விமானத்தை திருப்ப வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது.

விமானம் திரும்பியபோது நெறிமுறையின் படி பொலிஸ் அங்கிருந்தனர். ஆனால், அவர்கள் பயணிகளை வெளியேறும் படி கூறவோ அல்லது இந்த பிரச்சனையில் தலையிடவோ இல்லை.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அமீர் கான் அல்லது அவரது நண்பர்கள் யாரையும் தடை செய்யவில்லை என விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *